கம்பராமாயணம்

நூல்: கம்பராமாயணம்

ஆசிரியர் குறிப்பு:  கம்பர்


காலம்:  கி.பி. 12ம் நூற்றாண்டு

குலம்: உவச்சர்

ஊர்: தேரெழுந்தூர் (நாகை)

இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவைப்புலவராக இருந்தார்.

இவர் மகன் அம்பிகாபதி மகள் காவேரி 

இவரை ஆதரித்த வள்ளல் சடையப்ப வள்ளல் 

கம்பருக்கு கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தை வழங்கியவர் நாதமுனிகள்

கம்பரின் வேறு பெயர்கள்

கம்ப நாடன்

கம்ப நாட்டாழ்வார்.

கம்ப நாட்டுடைய வள்ளல்

தமிழ் மொழியின் மிகப்பெரிய இதிகாசங்கள் இரண்டு. 1. இராமாயணம்  2. மகாபாரதம்

இவற்றில் முதன்மையாக வைத்து போற்றப்படுவது இராமாயணம் ஆகும்

ஆதிக்கவி என்றழைக்கப்படுபவர் வால்மீகி.

இக்காப்பியத்தின் மூலநூல் வால்மீகி எழுதிய இராமாயணம் ஆகும்.

இதனை தழுவல் என்றும் கூறுவர்.

கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை ஆயிரம் (1000) பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் 10 முறை தம் நூலில் சிறப்பித்து பாடியுள்ளார்.

இதே போல் தமிழ் இலக்கியத்தில் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் சிறப்பித்து பாடிய புலவர் புகலேந்திப் புலவர் (சந்திர சுவர்க்கி)

இதேபோல் ஒவ்வொரு பாடலிலும் தம் வள்ளலை புகழ்ந்த புலவர் காளமேக புலவர் (திருமலைராயன்)

சோழக்காலத்தில் இயற்றப்பெற்ற வைணவநூல் கம்பராமாயணம்

கம்பர் தனது நூலில் இராமனை திருமால் அவதாரமாகவும், இலகுமனை ஆதிசேடன் அவதாரமாகவும், பரதனை சக்கரவர்த்தியின் அவதாரமாகவும், சுத்ருகனை சங்கின் அவதாரமாகவும் அறிமுகம் செய்கிறார்.

நூல் அமைப்பு

காண்டங்கள் 6, படலங்கள் 118, பாடல்கள் 10569 

காண்டங்கள் 6

1. பாலகாண்டம் - 33 படலங்கள். இராமனின் குழந்தைப் பருவ நிகழ்வு

2. அயோத்தி காண்டம் - 13 படலங்கள். இராமனின் இல்வாழ்வு குறித்தது.

3. ஆரண்ய காண்டம் - 13 படலங்கள். இராமனின் வனவாசம் குறித்தது.

4. கிட்கிந்தா காண்டம் - 16 படலங்கள். இராவணன் சீதையை களவு கொண்டு சென்றது.

5. சுந்தர காண்டம் - 14 படலங்கள். அனுமனை பற்றியது.

6. யுத்த காண்டம் - 39 படலங்கள். இராமன் இராவணனின் போர் பற்றியது.

Comments

Popular posts from this blog

கபிலர், கோவூர் கிழார், ஔவையார், பிசிராந்தையார், பத்துப்பாட்டு

IAS Exam Pattern, Marking Scheme, Compulsory Subjects